அமேதி தொகுதியைப் போல்…  இங்கும் ராகுலுக்கு தோல்வி தான் - பிரதமர் மோடி கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலம், நாண்டெட் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அங்கும் அவர் தோல்வி மட்டும் தான் அடைவார். 

தேர்தலுக்கு பிறகு அவர் வேறு பாதுகாப்பான இடத்தை தேடி கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு சென்றனர். 

காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை சரி செய்வதற்கு கடந்த 10 ஆண்டுகளை செலவிட்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. 

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டனர். சுயநலவாதிகள் தங்கள் ஊழல்களை மறைப்பதற்காக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm Modi says Rahul Gandhi lose wayanad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->