இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள்.! பிரதமர் மரியாதை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவர் ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். மேலும் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் ஒரு பழம்பெரும் தலைவர். அவர் தைரியத்தையும், அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். 

மேலும் அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Tribute to Indias First President Dr Rajendra Prasad on his Birthday


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->