இளைஞர்கள் அதிக அளவில் வாக்கு செலுத்த வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மே 13ஆம் தேதி எண்ணப்படுகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 5,30,85,566 வாக்காளர்கள் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்னர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,66,82,156 பேர், பெண் வாக்காளர்கள் 2,63,98,483 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 4,927 பேர். கர்நாடக மாநிலம் முழுவதும் 58,541 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்கு செலுத்த உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கர்நாடக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வளப்படுத்த வேண்டும்.

பஞ்சாபில் நாடாளுமன்றத் தொகுதிக்கும், மேகாலயா, ஒடிசா, உ.பி.யில் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை அதிக அளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Narendra Modi request youth should vote in large numbers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->