சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என அழைக்கப்படும்.!! - பிரதமர் மோடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என அழைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டம் வெற்றியடைந்ததை அடைத்து வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார். 

இன்று காலை 7:00 மணிக்கு இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் சந்திராயன்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இந்த நிலையில் நிலவில் தென்துருவத்தில் முதன் முதலில் கால் பதித்த நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்ற நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு என்ன பெயர் சூட்டுவது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்த பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி நிலவில் சந்திராயன்-3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு "சிவசக்தி" என அழைக்கப்படும் என அறிவித்துள்ளார். 

சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி.

இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது என பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் சந்திராயன் விஞ்ஞானிகளை பாராட்டிய பின் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi announced Chandrayaan3 lander landing place known as Sivasakthi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->