மதுரை சுப்புலட்சுமி எழுதிய கடிதம்.."நெகிழ்ச்சியில் பிரதமர் மோடி".. வைரலாகும் ட்விட்டர் பதிவு..!!
PMModi tweeted touching post from Madurai Subbulakshmi letter
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர் கேசவன் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சி.ஆர் கேசவன் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சி.ஆர் கேசவன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது தன் வீட்டில் சமையல் வேலைக்காரராக பணிபுரிந்த மதுரை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் வழங்கிய கடிதத்தை சி.ஆர் கேசவன் பிரதமரை மோடியிடம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் "இன்று நான் சி.ஆர் கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையற்காரராக பணிபுரிந்த சுப்புலட்சுமி அவர்களின் மனதைத் தொடும் கடிதத்தைப் பகிர்ந்து கொண்டார். மதுரையைச் சேர்ந்த சுப்புலட்சுமி சொந்தமாக வீடு கட்ட நிதி சிக்கல்கள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டார். அவர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்தார். சுப்புலக்ஷ்மி அவர்கள் தனது கடிதத்தில் "இந்த வீடு தனக்கு எப்படி முதன்மையானது என்பதையும், தனது வாழ்க்கையில் மரியாதை மற்றும் கண்ணியத்தையும் தருகிறது" என்பதையும் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது வீட்டின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு தனது நன்றியையும் ஆசிகளையும் தெரிவித்தார். இது போன்ற ஆசீர்வாதங்களே பெரும் பலத்திற்கு ஆதாரம். சுப்புலக்ஷ்மி அவர்கள் போலவே, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தால் வாழ்க்கை மாற்றப்பட்ட எண்ணற்ற மக்கள் உள்ளனர். ஒரு வீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு தரமான வேறுபாட்டைக் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் முன்னணியில் உள்ளது" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
English Summary
PMModi tweeted touching post from Madurai Subbulakshmi letter