பேருந்து நடத்துநர் மீது போக்சோ வழக்கு: பின்னணியில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


நவி, மும்பை பகுதியில் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பணியாற்றும் நடத்துனர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டு 17 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்துள்ளதாகவும் 48 வயதான சந்தோஷ் வாடகர் என்கிற நடத்துனர் மீது இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான புகாரில், 17 வயது பெண் மும்பைக்கு கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சந்தோஷ் பணியாற்றிய பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

இரவு நேரத்தில் 17 வயது பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது நடத்துனர் சந்தோஷ் அவரை தவறான முறையில் தொட முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POCSO case against conductor 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->