மருந்து குடித்து விவசாயி தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த பகீர் தகவல்.!
police investigation man sucide case in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள, தகழியில் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கே.ஜி.பிரசாத். விவசாயியான இவர் நேற்று இரவு விஷம் குடித்ததையடுத்து சிகிச்சைக்காக திருவல்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விவசாயி பிரசாத் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், "தனது மரணத்திற்கு மாநில அரசும், சில வங்கிகளும் தான் காரணம் என்று எழுதியுள்ளார். இதனால், போலீசார் நிதிநெருக்கடி காரணமாக பிரசாத் இந்த முடிவை எடுத்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், பிரசாத்தின் நண்பர்கள், பிரசாத் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறத் தவறியதால் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயி தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation man sucide case in kerala