மேட்ரிமோனியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - சிங்கப்பூர் இளைஞருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமண வரன் பார்க்கும் யோசனையில், அவரது குடும்பத்தினர் முன்னணி மேட்ரிமோனியல் தளத்தில் வரன்களை பார்த்து வந்தனர். 

அப்போது, அவர்களுக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அதன் படி, சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பை இளம்பெண்ணை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தார். ஆனால், தொழில் இலக்குகள் காரணமாக சில மாதங்கள் கழித்து திருமணம் என்று தள்ளிப்போட்டார்.

இவை அனைத்தையும் அந்த இளம்பெண் உண்மை என்று நம்பினார். இதையடுத்து, சிங்கப்பூர் மாப்பிள்ளை மும்பைக்கு வந்து இளம்பெண்ணை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருக்கிறார். 

அத்துடன் விடாமல் அந்த பெண்ணை மும்பையில் மட்டுமல்லாமல், சிங்கப்பூருக்கு வரவழைத்தும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே மும்பை பெண்ணுக்கு சந்தேகம் எழுந்து அவரிடம் இருந்து தப்பிக்க ஆரம்பித்த பொது தான், அந்த நபர் குறித்த இந்தத் தகவலும் தன்னிடம் இல்லை என்பதும், அதே வேளையில் தனது அந்தரங்க படங்கள் வீடியோக்கள் என்று தான் சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.

இருப்பினும், அந்த மும்பை இளம்பெண் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார்  வழக்கு பதிவு செய்து, சிங்கப்பூர் மாப்பிள்ளையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation of harassment case in navi mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->