குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரரின் மனைவி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரரின் மனைவி - நடந்தது என்ன?

நாட்டின் தலைநகரான டெல்லியில் முனிர்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண், அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் அந்த வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

உடனே போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மெத்தையில் இளம்பெண் ஒருவர், இரண்டு குழந்தைகளுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அவர்களுடைய மணிக்கட்டில் கூர்மையான காயங்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண், போதைப்பொருள் கட்டுப்பணியகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஜோகிந்தர் ஷர்மாவின் மனைவி வர்ஷா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரிய வந்தது. 

இது தொடர்பாக காவல் துறையினர் தெரிவித்ததாவது," வர்ஷா தனது குழந்தைகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்ததாக தெரிகிறது. எதற்காக அவர் இந்த நடவடிக்கையில் இறங்கினார் என்பது குறித்து விசாரணை வருகிறோம். விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சப்- டிவிஷனல் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றுத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer wife sucide with childrens in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->