வாடா, போடா என்று சொல்ல கூடாது - போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ரினிஷ். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த வழக்கறிஞரான அக்விப் சுகைல் என்பவர் விபத்தில் சிக்கிய ஒரு வாகனத்தை மீட்பதற்காக நீதிமன்ற உத்தரவுடன் காவல் நிலையத்திற்கு சென்றார். 

அங்கு அவரை ஆய்வாளர் ரினிஷ் ஆபாசமாகத் திட்டி மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து ஆய்வாளருக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், நேற்று காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி நேற்று டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜரானார். 

அப்போது, வழக்கறிஞரிடம் மோசமாக நடந்து கொண்ட ஆய்வாளர் ரினிஷ் எச்சரிக்கை செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று டிஜிபி தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, இதற்கு முன்பு பணிபுரிந்த காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதால் தான் ஆலத்தூருக்கு அவர் மாற்றப்பட்டார். 

அதனால், இடமாற்றம் செய்வதால் எந்தப் பலனும் ஏற்படாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தான் எஜமானர்கள். யாரையும் வாடா, போடா, நீ என்று அழைக்கக் கூடாது. இது தொடர்பாக போலீசாருக்கு டிஜிபி மீண்டும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officers dont called Disrespectfully to peoples court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->