ஐஸ்கிரீம்களில் அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி - இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள, நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபாதேவி என்ற பெண் தனது ஐந்து வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளத்தில் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். அதன் படி ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை திறந்து பார்த்த போது அதில் உறைந்திருந்த பூரானைக் கண்டு தீபா தேவி அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதற்கு முன்னதாக ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த வீடியோயும் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணும் உணவாக ஐஸ் கிரீம் இருந்து வருகிறது. இதனை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது பாதுகாப்பு கருதாமல், மனித விரல், பூரான் போன்றவை இருப்பது நிறுவனத்தின் அலட்சியத்தை காட்டுகிறது" என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooran found in ice cream


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->