இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.! அச்சத்தில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள குக்கிராமத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு நிலத்தில் ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து கதுவா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷிவ்தீப் சிங் ஜம்வால் கூறுகையில், இரவு 9:30 மணியளவில் குண்டுவெடிப்பு குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நாங்கள் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளிலும், ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையிலும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful blast in India Pakistan border near Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->