#Chandrayaan3 || சர்ச்சையை கிளப்பிய நடிகர் பிரகாஷ்ராஜ் இஸ்ரோவுக்கு வாழ்த்து.!! விடாமல் அடிக்கும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணி அளவில் நிலவில் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இஸ்ரோவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக நிலவை சுற்றி வந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. இது தொடர்பானசெய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து காணப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 20ஆம் தேதி சமூக வலைத்தளமான எக்ஸில் "முக்கியச் செய்தி: வாவ்… விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்" என பதிவிட்டு நிலவில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவு பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கருதிய பாஜக ஆதரவாளர்கள் பிரகாஷ் ராஜை பாஜகவினரும் இணையதள வாசிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

அதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றொரு பதிவில் "வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையை குறிப்பிடுகிறேன். அதன்படி என் பதிவில் நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். அதில் நீங்கள் எந்த சாய்வாலாவை பார்த்தீர்கள்? உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள்" என பதில் அளித்து இருந்தார் 

இந்த நிலையில் இன்று வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையறுக்கப்பட்டதை அடுத்து இணையதள வாசிகள் மீண்டும் பிரகாஷ்ராஜை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். எனினும் அவர் தனது எக்ஸ் சமுதாய வலைதள பக்கத்தில் "இந்தியா..மனித குலத்தின் பெருமைக்குரிய தருணங்கள்.. நன்றி.. #ISRO #Chandrayaan3 #VikramLander மற்றும் இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும்.. பரந்த உலகத்தின் மேலும் பல அதிசயங்களை அறிய இதுவே வழி... கொண்டாடுங்கள்.."என பதிவிட்டுள்ளார். அந்த பதிவிலும் விடாமல் இணையதள வாசிகள் பிரகாஷ்ராஜை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prakashraj praised ISRO who creating controversy over Chandrayaan3


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->