உண்மை வீடியோவை வெளியிடுவேன்.. திமுகவை மிரட்டும் பிரசாந்த் கிஷோர்..!!
Prashant Kishore give crisis to DMK and Rashtriya Janata Dal
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றிய பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்பொழுது வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பிகார் மாநில அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். குறிப்பாக "ரயிலில் வட மாநில தொழிலாளர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவை தமிழக ரயில்வே காவல்துறை கடந்த பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்டது. இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பிகார் அரசு கேட்க வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
![](https://img.seithipunal.com/media/mk stalin medical science conference 1-bgh8y.png)
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் "வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பலர் பொய்யான வீடியோக்களை பரப்புவது உண்மைதான். ஆனால் அதற்காக தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட முடியாது.
தமிழகத்தில் அரங்கேற்றப்பட்ட உண்மையான வீடியோக்களை விரைவில் வெளியிடுவேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார். நிதிஷ்குமார் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர் தற்பொழுது அவருக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டுடன் தீவிர கள அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/prasanth kishore-er4re.JPG)
தமிழக அரசியலையும் திமுகவையும் பற்றி நன்கு அறிந்த பிரசாந்த் கிஷோர் வட மாநில தொழிலாளர் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதும், இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருப்பதும், உண்மையான வீடியோவை வெளியிடுவதாக கூறி இருப்பதும் திமுகவை கதி கலங்க வைத்துள்ளது. இதனால் பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் தமிழகத்தை ஆளும் திமுகவும் கடும் நெருக்கடியை சந்திக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
English Summary
Prashant Kishore give crisis to DMK and Rashtriya Janata Dal