ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு! கர்ப்பிணி பெண்ணும் இரட்டைக் குழந்தைகளும் பலி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் கர்நாடக மாநிலம் தும்கூர் டவுன் பகுதியின் பாரதியார் நகரில் வாடகை வீட்டில் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருடைய கணவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணி பெண்ணான கஸ்தூரிக்கு உதவியாக மற்றொரு பெண்ணும் அவருடன் தங்கி இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து தும்கூர் அரசு மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தும்கூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் உஷா என்பவர் கஸ்தூரியின் தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கேட்டுள்ளார். அவரிடம் இரண்டு அட்டைகளும் இல்லாத காரணத்தால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தனியார் மருத்துவமனையில் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லாத காரணத்தால் கஸ்தூரி மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு கஸ்தூரிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அப்பொழுது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கஸ்தூரி உயிரிழக்க அடுத்த சில நிமிடங்களில் இரட்டை ஆண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.

ஒரே நேரத்தில் தாய் கஸ்தூரி மற்றும் அவருடைய இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழந்ததால் அப்பகுதி சோகத்தில் அமைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி மஞ்சுநாத் விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது கூடியிருந்த பொதுமக்கள் டாக்டரின் கவனக்குறைவால் தான் உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு முன் வைத்தனர்.

 இதனை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தின் பரிந்துரையின் பெயரில் பணியில் இருந்த டாக்டர் உஷா மற்றும் இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady died because lake of Aadhaar card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->