முதல்வர் ஒரு கையெழுத்திட்டால் மது விற்பனையை நிறுத்தலாம்! கடும் கோபத்தில் தமிழக மக்கள் - பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் ரூ.725 கோடி டாஸ்மாக் வருமானம் ஒருபுறம். தமிழ்நாட்டை போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை. மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, இது கண்டனத்துக்குறியது என்று, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது, ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை.

விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர், கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin TASMAC DMDK Premalatha  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->