பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்ஸோ சட்டத்தில் கைது!
Karur School Girl Abuse case Police constable arrested
கரூரில் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த காவலரை, மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூர் ரங்கநாதன் பேட்டை சேர்ந்த இளவரசன் (வயது 38), வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இன்னும் திருமணம் செய்து கொள்ளதா இளவரசன், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதனை அடுத்து விசாரணை செய்த போலீசார், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து, இன்று அதிகாலை இளவரசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
English Summary
Karur School Girl Abuse case Police constable arrested