குடியரசு தின விழா - பைகா பழங்குடியின குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு.!
president murmu invite three baika tribal family for republic day function
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள கவர்தா பகுதியில் 'பைகா' பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்துவிட்ட போதும், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் பலர் இன்றுவரை அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சத்தீஷ்காரில் உள்ள பைகா பழங்குடியினத்தை சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 'பைகா' பழங்குடியின குடும்பத்தினர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் உணவருந்த உள்ளனர். அதன் பின்னர் இவர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
president murmu invite three baika tribal family for republic day function