விதிகளை மீறிய பிரதமர்: நடவடிக்கை எடுக்கப்படுமா..? காங்கிரஸ் கேள்வி!
Prime Minister broke rules action taken Congress condemn
பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள் 5 ஆண்டுக்கு அரசு நீட்டிக்கும் என அறிவித்திருந்தார்.
நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்புக்கு மத்திய அரசவை இதுவரை ஒப்புதல் அளிக்க வில்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதற்குள் பொதுவெளியில் அறிவித்து விட்டார். பிரதமர் நரேந்திர மோடி எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
மத்திய அமைச்சரவைக்கு பா.ஜ.க அரசில் எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்தார் பின்னர் மத்திய அரசவை ஒப்புதல் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் அவர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Prime Minister broke rules action taken Congress condemn