பொங்கல் பண்டிகை : மக்களுக்கு தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.!
prime minister modi pongal wishes to peoples
ஒவ்வொரு வருடமும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் ஒன்று கூடி புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு மேளம் தட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பானையில் பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்று கூறி சத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா கட்டுப்பாடு காரணமாக களை இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுதுவதற்கு நான் பிராத்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
prime minister modi pongal wishes to peoples