புதிய வளர்ச்சிக்கான வரலாற்றை இளைஞர்கள் படைக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு.!
prime minister modi speech in jammu kashmeer young boys
இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 ஆயிரம் இளைஞர்களுக்கு மாநில அரசில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 21ஆம் நூற்றாண்டின் இந்தப் பத்தாண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகும்.
இந்த பணியின் மூலம், மாநிலத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. பழைய சவால்கள் அனைத்தையும் நீங்கள் புறம் தள்ளிவிட்டு, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது அதற்கான சரியான நேரம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, புதிய அணுகுமுறை, புதிய சிந்தனை ஆகியவற்றின் மூலம் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 முதல் இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் கடந்த 1-1.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20,000 வேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிக்கான வரலாற்றை இளைஞர்கள் படைக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
prime minister modi speech in jammu kashmeer young boys