தரை முதல் வானம் வரை பலத்த பாதுகாப்பு, பிரதமரின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் - Seithipunal
Seithipunal


வருகிற 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி உலகநாடுகளின் பெரும் தலைவர்கள் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர், இதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாராகிளைடர்கள், ஹேங் மோட்டார்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப உபகரணங்களை பறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர தாமோதரடோஸ் மோடியை பிரதமராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் டெல்லியில் மும்முரமாக நடந்து வருகிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் நரேந்திர மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நரேந்திர மோடி ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் பதவி பிரமாணம் எடுக்க உள்ளார். இந்த விழாவிற்கு பல உலக தலைவர்கள் வந்து கலந்து கொள்வதால், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி முழுவதும் பாதுகாப்பு மிகுந்த பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பதவியேற்பு விழா வரை இரண்டு நாட்களுக்கு டெல்லியில் பாராகிளைடர்கள், ட்ரோன்கள் போன்றவற்றை பறக்கவிடவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister narendra modi oath taking ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->