பணமோசடி வழக்கு - தனியார் நிறுவனத்தின் விமானம் பறிமுதல்.! அமலாக்கத்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.850 கோடி வரை சுருட்டியதாக புகார் எழுந்தது. இந்த பண மோசடி தொடர்பாக அந்த நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான அமர் தீப் குமார் மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குனரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அமர் தீப் குமார் தனது நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய விமானத்தில் கடந்த ஜனவரி மாதம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் அமர் தீப் குமார் நாட்டை விட்டு வெளியேற பயன்படுத்தப்பட்ட விமானம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் படி அங்கு விரைந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்ததில், எட்டு பேர் அமரக்கூடிய அந்த விமானம் 1.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து கடந்த ஆண்டு வாங்கப்பட்டது தெரியவந்தது.

இந்த விமானம் முதலீட்டு மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது. ஆகவே, அந்த விமானத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

private company flight seized in money fraud in telungana


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->