பா.ஜ.க சார்பாக வாழ்த்து!!! ' புனித ரமலான் பண்டிகை.... எல்லாம் வல்ல இறைவன்'! - அண்ணாமலை
Greetings behalf BJP Holy Ramadan Festival Almighty God Annamalai
தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ரம்ஜான் வாழ்த்து குறிப்பு ஒன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்கக்கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இனிய ரமலான் நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.இது இணைத்தில் வெகுவாக பரவி வருகிறது.
English Summary
Greetings behalf BJP Holy Ramadan Festival Almighty God Annamalai