ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்!
Welfare assistance to Muslim families during Ramadan DMK legislators delivered
தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனித ரமலானை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி.மயிலை த.வேலு ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
புனித ரமலான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை,தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட தியாகராய நகர் கிழக்கு பகுதி சிஐடி நகரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் நடைபெற்றது, 141அவட்டத்தில்மாவட்டசிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு தலைவர் . எஸ். ஷேக்முகமது அவர்களின் தலைமையில் 141.அ. வட்ட கிளை கழக செயலாளர் வழக்கறிஞர்எஸ். லட்சுமி காந்தன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
புனித ரமலானை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத்மாவட்ட கழகச் செயலாளரும் மயிலை சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு. தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ..கருணாநிதி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ரமலான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.
முன்னதாக பேசிய மாவட்ட கழகச் செயலாளர் திமுக என்றுமே இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும் ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு பல்வேறு இன்னல்களை உருவாக்கி அவர்களை துன்புறுத்துகிறது சிஏஏ சட்டம். வகுப்பு வாரிய திருத்த மசோதா போன்ற பல்வேறு பிரச்சனைகளை இஸ்லாமியர்களுக்கு செய்து வருகிறது திராவிட மாடல் அரசு சட்டமன்றத்தில் வகுப்பு வாரிய மசோதாவுக்கு சட்டமன்றத்தில் தடை விதித்து சிஏஏ சட்டத்தையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார் இஸ்லாமியர்களுக்கோ சிறுபான்மையினருக்கோ பிரச்சினைகள் என்றால் தமிழக முதல்வர் முதல் ஆளாக குரல் கொடுப்பார் அதுபோல் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் கூறினார்..
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே. ஏழுமலை எம். சி, நந்தனம் கி. மதி எம். சி, எஸ். முரளி, ராஜா அன்பழகன் எம். சி, வட்ட செயலாளர்கள் லலிதாபுரம் என். துரை, பி. மாரி, எஸ். செல்வகுமார், மற்றும் கழக நிர்வாகிகள், மகளீர் அணியினர், கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
English Summary
Welfare assistance to Muslim families during Ramadan DMK legislators delivered