கர்நாடகா : ஓட்டலில் தோசை சுட்டு பிரியங்கா காந்தி பிரச்சாரம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா : ஓட்டலில் தோசை சுட்டு பிரியங்கா காந்தி பிரச்சாரம்.!!

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜ.கவும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகாவுக்கு வருகைத் தந்துள்ளார்.

இதையடுத்து அவர் மாநிலத்தில், சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி காலை உணவு சாப்பிடுவதற்காகச் சென்று அங்கு இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். 

உணவு நன்றாக இருந்ததனால், அங்குள்ளவர்களிடம் தனக்கு தோசை சுட கற்று தரும்படி கேட்டு சமயலறைக்குச் சென்று தோசை சுட்டுள்ளார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது, "தோசை நன்றாக இருந்தது. அதனால், நான் எனக்கு தோசை சுட கற்று தருமாறு கேட்டு சமயலறைக்கு சென்று தோசை சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் 

மேலும், பிரியங்கா காந்தியுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanga gandhi election campaign in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->