தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே அனுமன் கோவிலில் தரிசனம் செய்யும் பிரியங்கா காந்தி.! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே அனுமன் கோவிலில் தரிசனம் செய்யும் பிரியங்கா காந்தி.!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை எட்டு மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர். 

கர்நாடகாவில் மட்டுமல்லாமல், டெல்லி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திவிரமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் வழிபாடு செய்தார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanga gandhi worship in hanuman temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->