மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது! தலைநகரில் தடை உத்தரவு அமல்!
Prohibition in capital as riots break out again in Manipur
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்தி மற்றும் கூகி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த வன்முறையின்போது கூகி பழகுடியினத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சற்று தணிந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் இன்று தலைநகர் இம்பாலில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தலைநகர் இம்பால் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் தலைநகரில் பதற்றத்தை தணிப்பதற்காக போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
Prohibition in capital as riots break out again in Manipur