தொடர்ந்து விரட்டும் டெங்கு - மருத்துவமனைகளுக்கு அதிரடி காட்டும் பொது சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து விரட்டும் டெங்கு - மருத்துவமனைகளுக்கு அதிரடி காட்டும் பொது சுகாதாரத்துறை.!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ஒவ்வொரு நாளும் 30 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாநில அரசும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெங்கு பரிசோதனை முடிவுகளை ஆறு மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களை பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன் படி தமிழகத்தில் உள்ள 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமப்புற சுகாதார நிலையங்களை ஒருங்கிணைத்து மாநில அரசு பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது.

டெங்கு தடுப்பு சிறப்பு பணியில் இதுவரைக்கும் இருபத்து மூன்று ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public health department order to dengue test result provide within six hours


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->