கர்நாடக தேர்தலில் வெடித்த வன்முறை.. வாக்கு இயந்திரத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொது தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையில் கர்நாடகாவில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்பே வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அடைத்து உடைத்துள்ளனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்ற நிலையில் பொதுமக்கள் அடித்து உடைத்தனர். 

தேர்தல் நடைபெறும் பொழுது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருப்பது வழக்கம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்படும் பட்சத்தில் அவசர தேவைக்காக கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை வேறொரு பகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எடுத்துச் சென்ற பொழுது வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரத்தை எடுத்துச் செல்வதாக நினைத்து கிராம மக்கள் அனைத்து உடைத்துள்ளனர்

 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்வது குறித்து கிராம மக்கள் கேள்வி எடுப்பது எழுப்பியதற்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால் ஆத்திரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து உடைத்து உள்ளனர். மேலும் வாக்குப்பதிவு பாதியில் நிரப்பப்பட்டதாக கூறி வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சென்ற வாகனத்தையும் கிராம மக்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்க பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public smashed the voting machine in Karnataka election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->