"இனி உன்ன டிஸ்டர்ப் பன்ன நான் இருக்க மாட்டேண்டா." காதலியின் கடைசி மெசேஜ்.! கதறும் குடும்பம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 45 வயதான முருகன் நான்கு மகளுக்கு தந்தை ஆவார். இவருக்கு வஸ்மிதா என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியராக வஸ்மிதா பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற வஸ்மிதா அறை கதவை பூட்டி கொண்டார். அதன் பின் அவரது தங்கை போய் கதவை தட்டிய போது திறக்கவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோரிடம் கூற தந்தை வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக அனைவரும் கதவை தட்டியும் வஸ்மிதா கதவை திறக்கவில்லை. 

ஆகவே, சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வஸ்மிதா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவல் அறிந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வஸ்மிதாவுக்கு சுரேஷ் என்பவருடன் காதலில் இருந்தது போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. இறுதியாக தனது செல்போனில் இருந்து அவர் ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த மெசேஜில் இனிமேல் என்னால் உங்களுக்கு தொல்லைகள் வராது என்று கூறியுள்ளார்  காதல் விவகாரத்தால் தனியார் பள்ளி ஆசிரியை இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucherry teacher Suicide For Love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->