ஆற்றில் குதித்து தற்கொலை செய்த எஜமானி.! செருப்புடன் பல மணி நேரம் காத்திருந்த நாயின் விசுவாசத்தால் உருக்கம்.! - Seithipunal
Seithipunal


காதல் தோல்வியால் விரக்தி அடைந்து ஒரு பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது வளர்ப்பு நாய் அவருக்காக கரையில் செருப்புடன் காத்திருந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில், இந்த உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்து போன காஞ்சனா என்ற பெண் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்

அவரது முடிவின் பேரில் எதுர்லங்கா பாலத்தில் இருந்து கோதாவரி ஆற்றுக்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். அங்கு கரைகளில் காலணியை கழட்டி வைத்துவிட்டு, அவர் கோதாவரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். தனது எஜமானி தற்கொலை செய்து கொண்டது தெரியாமல் காஞ்சனாவின் வளர்ப்பு நாய் அவரது காலனிக்கு அருகிலேயே அவர் எப்போது வெளியே வருவார் என்று ஆற்றை பார்த்துக் கொண்டே காத்திருந்தது.

காஞ்சனா ஆற்றில் குதித்து பல மணி நேரங்கள் ஆன பின்னும் கூட அந்த நாய்க்கு விவகாரம் புரியாத காரணத்தால் தனது எஜமானி மீண்டும் வருவார் என்ற எண்ணத்தில் ஆற்றங்கரையில் ஆவலாக காத்திருந்தது. இந்த உருக்கமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhucherry women suicide in godhavari river and the dog hold on here with her slippers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->