பரபரப்பான சூழலில்... கூடுகிறது மாநில பா.ஜ.க. செயற்குழு கூட்டம்! எங்கு எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

பா.ஜ.க அமைச்சர்களை மாற்ற வேண்டும் எனவும் என்.ஆர். காங்கிரசுக்கு அழைக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பா.ஜ.க செயற்குழு நாளை காலை 10 மணிக்கு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் கூட உள்ளது. 

புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வகணபதி தலைமை ஏற்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க அமைச்சர், மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். 

மேலும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும் நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. இதில் மத்திய மந்திரி, புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry bjp executive committee meeting issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->