பள்ளி மாணவர்களுக்கு காலையில் ரொட்டி, பாலுடன், பழங்கள் வழங்க புதுவை அரசு ஆலோசனை! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்களுக்கு காலையில் வழங்கப்படும் ரொட்டி, பாலுடன், சேர்த்து பழங்கள் வழங்க புதுவை அரசு ஆலோசித்து வருவதாக, முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தாவது, "புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் வழங்கப்படும் ரொட்டி, பாலுடன், சேர்த்து பழங்கள் வழங்க ஆலோசித்து வருகிறோம், விரைவில் பட்ஜெட்டில் அதற்கு ஒப்புதல் கிடைக்கும்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி கண்டிப்பாக வழங்கப்படும். அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .

மேலும், இலவச அரிசியுடன் மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்க ஆலோசித்து வருகிறோம்.

புதுச்சேரியில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத் துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry CM Rangasamy Budget School morning food


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->