முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!
Puducherry ex CM Narayanasamy affected covid positive
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்த போதிலும் கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Puducherry ex CM Narayanasamy affected covid positive