கொலை மிரட்டல் விடுக்கும் கணவர்: போலீசில் புகார் அளித்த முன்னாள் அமைச்சர்!
Puducherry ex minister complaint against her husband
புதுச்சேரி, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகளால் முதலமைச்சர் அதிருப்தி அடைந்து அமைச்சர் பதவியை விட்டு நீக்கினார்.
பதவியை இழந்த சந்திரபிரியங்கா பல்வேறு நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏவாக பங்கேற்று வருகிறார். கடந்த 6 மாதமாக சந்திரபிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சந்திர பிரியங்காவுக்கு அரசு வழங்கப்பட்ட வீட்டில் இருந்த பொருட்களை எடுக்கச் சென்ற சண்முகத்தை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் சண்முகம் ஏமாற்றம் அடைந்து காரைக்கால் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து கணவன்-மனைவி இடையே இருந்து வந்த குடும்ப பிரச்சனை மோதலாக மாறியது.
இதற்கிடையே சந்திரபிரியங்கா டி.ஜி.பியை சந்தித்து, எனது கணவர் சண்முகம் எனக்கு தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தன்னை அவதூறாக பேசுவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை செய்ய காரைக்கால் சீனியர் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். தற்போது எஸ்.பி விடுப்பில் சென்றுள்ளதால் 5 நாட்களுக்குப் பிறகு சண்முகத்தை விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள சந்திர பிரியங்காவிடம் புகார் புகார் தொடர்பாக கேட்டபோது தெரிவித்திருப்பதாவது, 'எனக்கு கொலை மிரட்டல் அதிகம் உள்ளது. எனக்கு எதிராக சதி வேலைகள் நடந்து வருகிறது. எனவே சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்' என்றார்.
English Summary
Puducherry ex minister complaint against her husband