பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார் மீது விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் உத்தரவு.!
Puducherry governor ordered enquiry about security issue on festival
புதுச்சேரி முதலமைச்சரிடம் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக காவலர் மீது புகார் எழுந்ததை அடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கடந்த 11ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் புதுச்சேரி முதலமைச்சர் அவர்களிடம் பாதுகாப்பு நெறிமுறைகளை தவறுதலாக கடைபிடித்தார் என்ற செய்தியை அறிந்தவுடன், அச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காவலரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல், மற்றவர்களுக்கும் இடையூறு இல்லாமல் சரியாக திட்டமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.
English Summary
Puducherry governor ordered enquiry about security issue on festival