#BREAKING || மாசிமக விழா : புதுவை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.!
Puducherry Masimagam
மாசி மாதம் மக நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மாசிமக விழாவின் போது, சிவாலயங்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்களுக்கு உற்சவம் நடைபெறும். இந்தாண்டு, மகாமகம் தொடர்புடைய சிவன் கோவில்களில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்க இருக்கிறது.
மாசி மக விழாவை முன்னி்ட்டு வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கும் பத்து நாள் உற்சவ நாட்களில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசிமகத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.