தமிழ்நாட்டை விடுங்க.. புதுச்சேரியில் எவ்வுளவு பேர் பாஸ் தெரியுமா? முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது போல புதுச்சேரியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 92.4 சதவீதமாக உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடானது 85.35 சதவீதமாக உள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6,566 மாணவர்களும் 7,446 மாணவிகளும் என மொத்தம் 14,012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவிகள் 7,081 பேரும் மாணவர்கள் 5,867 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் என 155 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 55 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ஒரு அரசு பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry plus 2 exam result detail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->