புதுச்சேரி | மதுக்கடை திறக்க எதிர்ப்பு! திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, வில்லியனூர்-பத்துகண்ணு செல்லும் பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களது குடியிருப்பு பகுதிக்கு எதிரே தனியார் மதுக்கடை ஒன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் மதுபான கடை திறக்க மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு வந்து இறக்கியதும் மதுபான கடை விரைவில் திறக்கப்படும் என பொதுமக்கள் மற்றும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தால் வில்லியனூர்-பத்துகண்ணு வழியாக செல்லும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையில் அணிவகுத்து நின்றன. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry protest against opening liquor shop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->