தடையின்றி இயங்கும் தமிழக பேருந்துகள்: புதுச்சேரியில் அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள அரசு பேருந்து பணிமனையில் 58 பேருந்துகள் உள்ளது. அந்த பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்படவில்லை. பணிமனையில் உள்ள ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் பெரும்பாலானோர் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் போக்குவரத்து கழகத்தை கொண்டு அதிக அளவில் சேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது படிப்படியாக தமிழக அரசு பேருந்துகளின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இந்த பகுதிகளில் இட நெருக்கீடு ஏற்படுகிறது.

இதனால் பயணிகள் கூட்டத்திற்கு ஏற்றார் போல் பேருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய பயணிகள் அதிக அளவில் உள்ளதால் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை அதிகம் இயக்கப்படுகிறது. 

சென்னை செல்லும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. புதுச்சேரியிலிருந்து தென் மாவட்டங்களான நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு அதிகப்படியான தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

அதேபோல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை, பெங்களூரு செல்வதற்கான பேருந்துகளும் தொடர்ந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. 

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தால் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Tamil Nadu buses running 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->