சொகுசு வாகனம் ஓட்ட ஆசை.! யூ-டியூப் பார்த்து திருடிய இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம், சேதாரப்பட்டு-மயிலம் சாலையில் காவல்துறையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி வாகனத்தின் ஆவணங்களை கேட்டனர். அப்போது, வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.  இதில் அவர்கள் புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரதாப்  மற்றும் திருப்பத்துார் மாவட்டம் சத்தராயகவுண்டனுார் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

பிரதாப் சேதராப்பட்டில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. இதனால் பைக் திருடுவது எப்படி என்று 'யூ-டியூப்' பில் பார்த்து பயிற்சி எடுத்துள்ளார். பின்னர் தான் வேலை செய்யும் கம்பெனியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடியுள்ளார். 

இதன் பின்னர், சுதாகரை புதுச்சேரிக்கு வரவழைத்து, வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழற்றிவிட்டு சேதராப்பட்டிற்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry youngsters arrest for bike robbery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->