புதுச்சேரி || கடல் சீற்றத்தால் மூன்று வீடுகள் சேதம்.! தடுப்பு அமைக்க கூறி மீனவர்கள் சாலை மறியல்..!
puthuchey fishermans strike
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமங்களை கடல் அரிப்பில் இருந்து தடுப்பதற்காக தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த இரு கிராமங்களுக்கு இடையேயான தமிழக மீனவ பகுதி தான் பிள்ளைச்சாவடி. புதுச்சேரி பகுதியில் தூண்டில் வளைவு கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் தமிழக மீனவ பகுதிக்குள் கடல்நீர் உட்புகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியிலும் கடல்நீர் உள்ளே வராமல் இருப்பதற்கு கற்கள் கொட்ட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று இரவு கடல் சீற்றத்தால் மூன்று வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், கடல் அரிப்பை தடுப்பதற்கு கற்கள் கொட்ட வலியுறுத்தி புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டைக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் நின்றது.
English Summary
puthuchey fishermans strike