போதுமான அளவில் ரிசர்வ் வங்கியிடம் அந்நியச் செலவாணி கையிருப்பு - ரகுராம் ராஜன்
Raghuram rajan says RBI has enough foreign exchange
பன்னாட்டு சந்தைகளின் சரிவால் உணவுப்பொருள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து பண வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு போதுமான அளவில் அந்நியச்செலாவணி இல்லாததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்று அல்லாமல் ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்து வருவகிறது, வெளிநாட்டு கடனும் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் பண வீக்கம் உள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் பண வீக்கம் குறைந்துள்ளதாகவும், உலக நாடுகளில் பண வீக்கம் குறையும் போது இந்தியாவிலும் பண வீக்கம் குறைந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Raghuram rajan says RBI has enough foreign exchange