பாஜகவிற்கு காங்கிரஸ் உதவி தேவை - பிரச்சாரத்தில் தெறிக்கவிட்ட ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக கேரளா மற்றும் கர்நாடகா உட்பட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், "பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் உதவி தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் நலன் வேலைவாய்ப்பு மற்றும் விவசாய நலன் குறித்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் நிலவிற்கு மனிதனை அனுப்புவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதனை நிலவிற்கு அனுப்புவதற்கு இஸ்ரோ ராக்கெட்டை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். ஆனால் இஸ்ரோவை நிறுவியது காங்கிரஸ். அதனால், பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் அதற்கு காங்கிரஸ் உதவி தேவை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ragul gandhi election campaighn in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->