வேலைவாய்ப்புக் கேட்டால் புல்டோசரை ஏவுவதா? - பாஜகவுக்கு ராகுல்காந்தி கண்டனம்.!
ragulgandhi condemns to bjp for launching a buldosar on kashmeer seeking employments
காஷ்மீர் மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், தங்களுடைய வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை உடனே நிறுத்துமாறு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- "காஷ்மீர் மாநில மக்கள் விரும்புவது வேலைவாய்ப்பு, சிறப்பான வர்த்தக சூழ்நிலை மற்றும் அன்பு போன்றவை தான்.
ஆனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? பாஜகவின் புல்டோசர் தான். பல ஆண்டுகளாக மக்கள் பாடுபட்டு சேர்த்த நிலம், தற்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அமைதியையும், காஷ்மீரையும் மக்களை ஒன்றுபடுத்தித்தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, மக்களை பிரித்து பார்க்க நினைக்கக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
ragulgandhi condemns to bjp for launching a buldosar on kashmeer seeking employments