ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு பரிசாக அளித்த நாய்க்கு 'நூர்' என பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்திரப்பிரதேசம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

இஸ்லாமிய புனித நூலான குரானுடன் 'நூர்' என்ற வார்த்தை தொடர் உடையது. இந்த வார்த்தை குரானில் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்து உள்ள மஜ்லிஸ் கட்சித் தலைவர் முகமது பர்கான் தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து முகமது பர்கானின் வழக்கறிஞர் முகமது அலி தெரிவித்திருப்பதாவது, ''இந்திய தண்டனைச் சட்டம் 295 பிரிவின் கீழ் ராகுல் காந்தி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். 

ராகுல் காந்தி தனது முகநூல் மற்றும் யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரை குறிப்பிட்டுள்ளார். செய்திகளிலும் இது தொடர்பாக வந்துள்ளன. 

அவற்றை ஆதாரமாகக் காட்டியுள்ளோம்'' என்றார். கடந்த 4 ஆம் தேதி உலக விலங்குகள் தினத்தை ஒட்டி தனது தாய் சோனியாவுக்கு 'நூர்' என பெயரிட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi against case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->