கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. ராகுல் காந்தி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய், ஊக்கத்தொகை வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3000 ரூபாய் வரை ஊக்கத்தொகை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்ற 4 முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஐந்தாவது வாக்குறுதியாக கர்நாடகாவில் அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடுப்பி மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மீனவர்களுடன் பேசிய ராகுல் காந்தி மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் உயிர் காப்பீடு, மீனவப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வடியில்லா கடன், மீனவருக்கு நாள்தோறும் 500 லிட்டர் டீசல் 25 ரூபாய் மானியத்துடன் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi announced Free bus travel for women in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->