டெல்லி வன்முறை மற்றும் ஏழைகளுக்குத் தேவைப்படும் போதும்; பார்க்க முடியவில்லை; அரவிந்த் கெஜ்ரிவாலை சாடிய ராகுல் காந்தி..!
Rahul Gandhi criticized Arvind Kejriwal
தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.யான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:
அரவிந்த் கெஜ்ரிவால் வித்தியாசமான அரசியல் செய்து வருவதாக கூறுகிறார். அவர் சிறிய காரில் வந்தார். ஆனால் ஷீஷ் மகாலில் வசித்து வருகிறார்.

ஏழைகளுக்குத் தேவைப்படும்போதும், டெல்லி வன்முறையை எதிர்கொண்டபோதும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்க முடியவில்லை.
பட்பர்கஞ்ச் எம்.எல்.ஏ மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மதுபான ஊழலை உருவாக்கியவர். அதனால்தான் சிசோடியா பதவியை விட்டு விலகினார் என தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi criticized Arvind Kejriwal