இங்கு பா.ஜ.க படுதோல்வி அடையும்... ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு.!
Rahul Gandhi says Uttar Pradesh bjp lose
உத்திர பிரதேசம், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசி இருப்பதாவது, இந்தியா கூட்டணி புயல் உத்தர பிரதேசத்திற்கும் வந்துவிட்டது. மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை பா.ஜ.க சந்திக்க போகிறது.
நாடு முழுவதும் பா.ஜ.க தோல்விக்கு உத்தர பிரதேசம் தான் வழிகாட்ட உள்ளது. தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி அதானிடம் பிரதமர் மன்றாடுகிறார்.
அடுத்த 15 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப பிரதமர், அமித் ஷா ஆகியோர் முயற்சி செய்கிறார்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi says Uttar Pradesh bjp lose